குழந்தைகளுக்கான பால் (Baal) ஆதார் அட்டை முன்பதிவு – எளிய வழிமுறைகள் இதோ!

0
குழந்தைகளுக்கான பால் (Baal) ஆதார் அட்டை முன்பதிவு - எளிய வழிமுறைகள் இதோ!
குழந்தைகளுக்கான பால் (Baal) ஆதார் அட்டை முன்பதிவு - எளிய வழிமுறைகள் இதோ!
குழந்தைகளுக்கான பால் (Baal) ஆதார் அட்டை முன்பதிவு – எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள், குழந்தைகளுக்கும் கூட கொடுக்கப்படுகிறது. இவ்வகை பால் (Baal) ஆதார் அட்டைகளை நீங்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து ஆதார் மையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆதார் அட்டைகள்

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) அனைத்து குழந்தைகளுக்குமான ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. இந்த ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என UIDAI தனது ட்விட்டர் பதிவின் மூலம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பிரத்யேகமான, நீல நிறத்தில் அமைந்துள்ள பால் (Baal) ஆதார் அட்டைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. இந்த ஆதார் அட்டைகளை வைத்து தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

திருச்சியில் ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

அந்த வகையில் 5 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்களுக்குமான பால் ஆதார் அட்டைகளை பெற்ற பெற்றோர்கள், தங்களது குழந்தை 5 வயதாகும் போது அவற்றை பயோமெட்ரிக் தகவல்களுடன் புதுப்பிப்பது கட்டாயம் ஆகும். இதற்காக பெற்றோர்கள், தங்கள் குழந்தையை அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் புதுப்பிப்பை மேற்கொள்ளலாம் என ட்விட்டர் பதிவின் மூலம் UIDAI விளக்கியுள்ளது. அந்த வகையில் நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் மையங்களை தெரிந்து கொள்ள appointments.uidai.gov.in/easearch.aspx? என்ற இணையதள முகவரியையும் கொடுத்துள்ளது.

தவிர இந்த இணையதளத்தை பயன்படுத்தி பெற்றோர்கள், குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்பை மேற்கொள்ள முன் பதிவு செய்து கொள்ளலாம் என UIDAI தெரிவித்துள்ளது. அதற்காக முதலில்,

  • appointments.uidai.gov.in/easearch.aspx? மற்றும் AspxAutoDetectCookieSupport=1 என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் மாநிலம், அஞ்சல் குறியீடு என்பதை தேர்வு செய்யவும்.
  • அல்லது Search box ஆப்ஷனையும் கிளிக் செய்யலாம்.

TN Job “FB  Group” Join Now

  • அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • பிறகு Locate Centre என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிந்ததும், முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!