குழந்தைகளுக்கு ‘இந்த’ ஆவணத்தை எடுத்தாச்சா? – தவற விடாதீங்க!

0
குழந்தைகளுக்கு 'இந்த' ஆவணத்தை எடுத்தாச்சா? - தவற விடாதீங்க!
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுக்க வேண்டிய ஆதார் அட்டை குறித்தான முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்ட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது. ஆதார் அட்டையில் ஒரு தனிப்பட்ட குடியினரின் பெயர், வயது, முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. இதே போல் 2018 ஆம் ஆண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பால் ஆதார் அட்டையை பெறுவார்கள். ஐந்து வயதிற்கு பின்னர் குழந்தைகளின் விவரங்களை பெற்றோர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பால் ஆதார அட்டையை எடுப்பதற்கான வழிமுறைகள்:
  • பால் ஆதார் கார்டு பெற அதன் அதிகாரபூர்வ இணையதளமான, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில்,  “My Aadhar” பகுதியில்,  “Book an appointment” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர்,  “Child Aadhaar” என்பதைத் தேர்வு செய்து, அதில்,  “New Aadhar” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை (கேப்ட்சா) உள்ளிட வேண்டும்.
  • “Relationship with Head of Family” என்பதன் கீழ், “Child (0-5 years)” என்பதைத் தேர்ந்தெடுத்து,  உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் ஆபாயிண்ட்மென்ட் ஐ பதிவு செய்து, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து,  உங்கள் முன்பதிவை உறுதிப்படுதிக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!