ராதிகாவுடன் கோபி சேர்ந்து இருப்பதை பார்த்த ராமமூர்த்தி, ஜெனியை பார்க்க செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவுடன் கோபி சேர்ந்து இருப்பதை பார்த்த ராமமூர்த்தி, ஜெனியை பார்க்க செல்லும் பாக்கியா - இன்றைய
ராதிகாவுடன் கோபி சேர்ந்து இருப்பதை பார்த்த ராமமூர்த்தி, ஜெனியை பார்க்க செல்லும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவுடன் கோபி சேர்ந்து இருப்பதை பார்த்த ராமமூர்த்தி, ஜெனியை பார்க்க செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், புதிய காரில் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி கோவிலுக்கு வருகிறார். அங்கே பாக்கியாவும் ராமமூர்த்தியும் வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், புதிய காரை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொல்ல, கோபி கிளம்புகிறார். மயூரா காரில் செல்வதை நினைத்து சந்தோசமாக இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து பாக்கியாவும் ராமமூர்த்தியும் கோவிலுக்கு வருகிறார்கள். பின் கோபி சாமி கும்பிட பாக்கியாவும் தாத்தாவும் அவர்களுக்கு பின் சாமி கும்பிடுகிறார்கள். அப்போது பாக்கியா ஜெனி வீட்டிற்கு போய்ட்டு வருவோமா என கேட்கிறார்.

வீட்டில் சொல்லிவிட்டு போனால் அத்தை கோவமாக இருக்கார். நாம் இப்படியே சென்றுவிடுவோம் என சொல்ல, ராமமூர்த்தி வேண்டாம் நான் வரவில்லை, நீ போய்ட்டு வா என சொல்கிறார். நான் வர அரைமணி நேரம் ஆகும் என சொல்ல, அதுவரை நான் கோவிலில் இருக்கிறேன் என தாத்தா சொல்கிறார். பின் கார் அருகே கோபி இருக்க மயூரா காரில் போக வேண்டும் என கேட்கிறார். அந்த நேரம் கோபி உள்ளே வர பாக்கியா வெளியே போகிறார்.

கயலை பற்றி கவலைப்படும் மீனா, கதிர் சொன்னதை கேட்காததால் வருத்தத்தில் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ராமமூர்த்தி கோவிலில் அமர்ந்திருக்க, ராதிகாவுடன் கோபி போகிறார். அங்கே சாமி கும்பிட்டு இருக்க ராமமூர்த்தி ரொம்ப நேரம் உட்கார முடியாமல் எழுந்து நிற்கிறார். அப்போது கோபி அங்கே நிற்பதை பார்த்து இவன் இங்கே என்ன செய்கிறான் என தெரியாமல் இருக்கிறார். யாரிடம் பேசுகிறான் என குழப்பத்தில் இருக்க, கோபி ராதிகாவுக்கு குங்குமம் வைத்து விடுகிறார். அதை ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார். மேலும் மயூராவுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்.

பின் மூவரும் காரில் சென்றுவிட்டதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார். இவன் எதற்கு ராதிகாவுக்கு பொட்டு வைத்துவிடனும் இருவருக்கும் ரொம்ப நாள் பழக்கம் இருக்கு போல என நினைக்கிறார். இது பாக்கியாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கிறார். பின் பாக்கியா ஜெனியை பார்க்க செல்ல, ஜெனியின் அம்மா அப்பா வருகிறார். நாங்க ஜெனியை அனுப்புவதாக இல்லை என சொல்ல, ஏன் இப்படி பேசுறீங்க என ஜெனி கோபப்படுகிறார்.

ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்லும் பாரதி, உண்மை தெரிந்த பயத்தில் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஜெனி மிகவும் வருத்தமாக இருந்ததால் தான் நான் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டேன் என சொல்ல, ஜெனியின் அப்பா கோவமாக பாக்கியாவிடம் பேசுகிறார். பரவாயில்லை உன் அப்பாவின் வருத்தம் எனக்கு புரியும் நான் உன்னை கூட்டிக் கொண்டு போக வரவில்லை, செழியன் என்னிடம் ஜெனியை கூட்டிக் கொண்டு வர சொல்லி சொன்னான், ஆனால் நான் முடியாது என சொல்லிவிட்டேன் நீங்க செய்தது சரி தான், நீங்க வருத்தமாக இருப்பது தெரிந்து தான் உங்களை பார்க்க வந்தேன் என சொல்கிறார்.

செழியனிடம் இது பற்றி பேசிக் கொண்டே தான் இருக்கிறேன். அவன் வேலை வேலை என இருக்கான். உடனே ஜோசப் உங்க பையனுக்கு ஆதரவாக பேச வந்தீங்களா என கேட்க, ஜெனி என்னுடைய பொண்ணு போல தான் நினைக்கிறன். நீங்க உங்க பொண்ணை தப்பான இடத்தில் கல்யாணம் பண்ணவில்லை. ஜெனி உனக்கு எப்போதும் என்னுடைய சப்போர்ட் இருக்கும் சொல்லி கிளம்புகிறார் பாக்கியா. மறுபக்கம் ராமமூர்த்தி கோவத்தில் கோபி பற்றி நினைத்து பார்க்கிறார். ராதிகாவை பார்க்க கூடாது என்று தான் வீட்டிற்கு வரமாட்டேன் என சொல்லிருக்கான் என நினைத்து பார்க்கிறார். பாக்கியா ராதிகாவிடம் எவ்வளவு நட்பாக பழகுகிறார் ஆனால் ராதிகா ஏன் துரோகம் செய்ய வேண்டும் என நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!