ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்லும் பாரதி, உண்மை தெரிந்த பயத்தில் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்லும் பாரதி, உண்மை தெரிந்த பயத்தில் அஞ்சலி - இன்றைய
ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்லும் பாரதி, உண்மை தெரிந்த பயத்தில் அஞ்சலி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்லும் பாரதி, உண்மை தெரிந்த பயத்தில் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமாவை பார்க்க அஞ்சலி அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கே அவர்கள் இல்லாததை நினைத்து கோபத்துடன் கிளம்புகிறார். மறுபக்கம் அஞ்சலி வீட்டிற்கு கிளம்ப கண்ணம்மா விடாமல் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் அம்மா அவரது அப்பாவை காணவில்லை என திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து பாரதியின் கார் வருகிறது. பாரதி எதற்கு இங்கே வராரு என நினைத்து விவாகரத்து பற்றி பேச வருகிறார் போல என நினைக்கிறார். பின் பாரதி உள்ளே வர நீங்க எதற்காக வந்திருக்கீங்க என எனக்கு தெரியும் என சொல்கிறார். உடனே அஞ்சலி அம்மா கண்ணம்மா விஷயம் தானா நான் முடித்து கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார்.

அப்பறம் அஞ்சலி எப்படி இருக்கா என பாக்கிய கேட்க அப்போ அஞ்சலி இங்கே வரலையா என கேட்கிறார். விவாகரத்து விஷயத்தை சீக்கரம் முடிக்கவில்லை என கோவமா என கேட்கிறார். பாரதி அப்படி எல்லாம் இல்லை என கிளம்ப, அஞ்சலி அம்மா இதை அஞ்சலியிடம் சொல்ல வேண்டும் என கேட்கிறார். உடனே அவர் போன் செய்ய ஹேமா மற்றும் லட்சுமி போனை வைத்துவிடுகிறார். கண்ணம்மா கடைக்கு செல்ல அஞ்சலி நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். உடனே கண்ணம்மா ஹேமா கொஞ்ச நாள் என்னுடன் இருக்கட்டும் என சொல்ல, அகிலை பார்க்க வேண்டும் என அஞ்சலி சொல்கிறார்.

ஆன்லைனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு – இலவச சேவையை கண்டுபிடிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!

அகிலை இங்கே வர சொல்லு இல்லை என்றால் நீ மட்டும் போ ஹேமா இங்க இருக்கட்டும் என கண்ணம்மா சொல்ல அஞ்சலி என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். அப்போது பார்த்து பாரதி கண்ணம்மா தான் திட்டமிட்டுருப்பார் என நினைத்து கோவத்தில் வர கண்ணம்மா கடந்து செல்கிறார். அஞ்சலி ஹேமா லட்சுமியுடன் விளையாடி கொண்டிருக்க அங்கே பாரதி வருகிறார். அவரை பார்த்து ஹேமா மற்றும் அஞ்சலி பயப்பட லட்சுமி மட்டும் பேசுகிறார்.

பாரதி கிளம்பலாமா என கேட்க அஞ்சலி கிளம்ப செல்கிறார். அஞ்சலி காரில் என்ன நடக்க போகுதோ என தெரியாமல் இருக்க, அஞ்சலி அம்மாவிடம் இருந்து போன் வந்ததை நினைத்து பார்க்கிறார். ஹேமா ஏன் கோவமாக இருக்கீங்க என கேட்க, பாரதி ஒன்றும் பேசாமல் வருகிறார். அப்போது கண்ணம்மா வீட்டிற்கு வந்து அஞ்சலியிடம் பேசிக் கொண்டிருக்க லட்சுமியிடம் சீக்கரம் வர சொல்லு என கேட்கிறார். லட்சுமி அவங்க இங்க இல்லை என சொல்ல, எங்கே போனாங்க என கேட்கிறார்.

பாரதி அங்கிள் வந்து கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார் என சொல்ல. கண்ணம்மா வருத்தப்படுகிறார். எப்போ என கேட்க இப்போ தான் என லட்சுமி சொல்கிறார். பாரதி அங்கிள் வந்து எதுவும் பேசவில்லை கிளம்பலாமா என கேட்க அஞ்சலி மற்றும் ஹேமா எதுவும் பேசாமல் கிளம்புகிறார். உடனே கண்ணம்மா ஹேமா என்னுடைய பொண்ணு அவளை பார்க்க எனக்கு ஆசை இருக்காதா என கண்ணம்மா நினைத்து பார்க்கிறார். உண்மையை சொல்லிவிட வேண்டியது தான் என கண்ணம்மா நினைக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி – ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு!

மறுபக்கம் சௌந்தர்யா வேணு கண்ணம்மா சந்தோசமாக இருப்பாள் என நினைத்து பார்க்கிறார்கள். பாரதிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்க, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சௌந்தர்யா சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பாரதி கோபத்துடன் வர அஞ்சலி மற்றும் ஹேமாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். உடனே பாரதி என்ன இது என கேட்க, சௌந்தர்யா என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். அப்போது ஹேமாவை உள்ளே அனுப்பிவிட்டு, சௌந்தர்யா கத்துகிறார். இத்தனை நாள் நீங்க மட்டும் தான் நடிச்சீங்க இப்போ ஹேமாவை உடன் சேர்த்துக் கொண்டிரீகள். அம்மா அப்பா அகில் கேட்ட கூட நான் ஹேமாவை அனுப்பிருக்கமாட்டேன் ஆனால் நீயே கேட்டதால் தான் நான் அனுப்பி வைத்தேன் என சொல்ல, அஞ்சலி வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!