அமிர்தாவின் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடையும் எழில், ராமமூர்த்தி பற்றி கோபியிடம் கேட்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தாவின் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடையும் எழில், ராமமூர்த்தி பற்றி கோபியிடம் கேட்கும் ஈஸ்வரி - இன்றைய
அமிர்தாவின் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடையும் எழில், ராமமூர்த்தி பற்றி கோபியிடம் கேட்கும் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தாவின் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடையும் எழில், ராமமூர்த்தி பற்றி கோபியிடம் கேட்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா அம்மாவை பார்க்க வர உன்னை பற்றி தான் எப்போதும் பேசுவார்கள் என சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தா குழந்தையை காட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வர அமிர்தாவின் அம்மாவை அறிமுகம் செய்து வைக்கின்றனர். நீ தான் எழில் உன்னை பற்றி தான் இத்தனை நாள் பேசுவார்கள் உடம்பு எப்படி இருக்கிறது என கேட்டால் கூட எழில் இப்போது தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் என சொல்வார்கள் என சொல்கிறார். அமிர்தா அனைவருக்கும் காபி கொடுக்க, எதோ சர்ப்ரைஸ் இருக்கிறது என சொன்னீர்கள் என கேட்கிறார்.

எழில் அதெல்லாம் அப்பறம் தான் நீங்க எதோ சர்ப்ரைஸ் இருக்கிறது என சொன்னீங்க என கேட்க, குழந்தை அழ சத்தம் கேட்கிறது. அப்போது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து அமிர்தா நிற்க யாருடைய குழந்தை என எழில் கேட்கிறார். என்னுடைய குழந்தை தான் என அமிர்தா சொல்ல, அதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார். குழந்தை இங்கே வளர்ந்தால் அமிர்தாவால் படிக்க முடியாது என்பதால் அவர் அம்மாவிடம் குழந்தை வளர்கிறாள் என சொல்கிறார்.

சாந்தி முகுர்த்தம் ஹோட்டலில் ஏற்பாடு செய்யும் சந்திரலேகா, சென்னைக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹாசங்கமம்” எபிசோட்!

பின் கணேஷ் அம்மா போட்டோவை பார்த்து அமிர்தா வயிற்றில் குழந்தை இருப்பது கூட தெரியாமல் அவன் சென்றுவிட்டான் என வருத்தப்பட்டு அழுகிறார். பின் எழில் என்ன சொல்வதென்று தெரியாமல் வீட்டிற்கு கிளம்புகிறார். அமிர்தாவின் அம்மா நீ நிறைய பேசுவாய் என சொன்னார்கள் ஆனால் எதுவும் பேசாமல் இருக்கிறாய் என கேட்க, அமிர்தா பிறந்தநாளுக்கு எதோ சர்ப்ரைஸ் இருக்கிறது என சொன்னீங்க என கேட்கிறார். நீங்க கொடுத்த சர்ப்ரைஸ் விட இது பெரிய விஷயம் இல்லை என எழில் சொல்லி வெளியே வந்து கிபிட்டை கொடுக்கிறார்.

எழில் வீட்டிற்கு வர ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் என பாக்கியா கேட்கிறார். ஒன்றுமில்லை என எழில் சொல்ல, சாப்பாடு தரவா என பாக்கியா கேட்கிறார். நான் சாப்பிட்டேன் என சொல்ல, பாக்கியா எழில் முகம் சரியாக இல்லாததை கவனிக்கிறார். என்ன நடந்தது என கேட்க, எழில் பாக்கியா மடியில் படுத்துக் கொண்டு அழுகிறார். ஆபிஸில் பிரச்சனை என்பது போல பேச பாக்கியா ஆறுதலாக பேசுகிறார். எழில் நண்பர் வீட்டிற்கு எழிலை பார்க்க வருகிறார். பாக்கியா என்ன இத்தனை நாட்களாக இந்த பக்கம் வரவே இல்லை என சொல்ல, எழில் எங்கே என கேட்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி கேட்கும் நீதிபதி, விவாகரத்து வேண்டும் என சொல்லும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அவன் இப்போது தான் வந்தான் என சொல்ல, மாடியில் எழில் இருக்கிறார். எழில் நண்பர் அமிர்தாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்றுவிட்டு போனை எடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம் என கேட்கிறார். அமிர்தாவிடம் சொல்லிவிட்டியா என கேட்க, அமிர்தாவின் சர்ப்ரைஸ் நான் சொல்ல வந்ததை விட பெரிய விஷயமாக இருக்கிறது என சொல்கிறார். அமிர்தா குழந்தையை காட்டியது பற்றி சொல்ல, நல்லவேளை எதுவும் சொல்லவில்லை என எழில் நண்பர் சொல்கிறார். காதல் எல்லாம் வேண்டாம் அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க சாப்பிட்டு நாளை முதல் வேலையை பார்க்கலாம் என அவர் சொல்கிறார்.

கோபி அமர்ந்திருக்க, ஈஸ்வரி ஊருக்கு சென்று தாத்தா என்ன செய்கிறார் என்ன பார்த்துவிட்டு வரலாம் என சொல்கிறார். இனியாவிற்கு ஒரு வாரம் லீவு இருக்கிறது என சொல்ல , எப்போது ட்ரெஸ் எடுக்க போகிறோம் என இனியா கேட்க, அம்மாவை கூட்டிக் கொண்டு செல் என சொல்கிறார். பாக்கியா போறதுக்கு முன்னாடி என்னிடம் பணம் வாங்கி கொள் அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடு என சொல்கிறார். தீபாவளிக்கு உன் அப்பா வருவாரு கோபி என கேட்க, பாக்கியா அதெல்லாம் வருவாங்க என சொல்கிறார். கோபியை போன் செய்ய சொல்லி ஈஸ்வரி சொல்ல, அவர் வந்துருவார் என சொல்கிறார். கோபி உனக்கு எதாவது போன் செய்தாரா என கேட்க இல்லை என சொல்கிறார். உனக்கும் அவருக்கும் எதாவது பிரச்சனையா என கேட்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!