திருமண நிகழ்ச்சியில் கோபியை பார்த்த ராதிகா, வசமாக மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
திருமண நிகழ்ச்சியில் கோபியை பார்த்த ராதிகா, வசமாக மாட்டிக் கொண்ட கோபி - இன்றைய
திருமண நிகழ்ச்சியில் கோபியை பார்த்த ராதிகா, வசமாக மாட்டிக் கொண்ட கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
திருமண நிகழ்ச்சியில் கோபியை பார்த்த ராதிகா, வசமாக மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் சொந்தக்காரர் திருமண நிகழ்ச்சிக்கு கோபி மற்றும் பாக்கியா வருகின்றனர். மறுபக்கம் அதே நிகழ்ச்சிக்கு ராதிகாவும் வருகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் கோபியும் சொந்தக்காரர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபியின் சித்தி வந்து பேச கோபிக்கு யார் என தெரியாமல் இருக்கிறார். பின் பாக்கியா இந்த புடவை நினைவு இருக்கிறதா என கேட்கிறார். எனக்கு ஞாபகம் இல்லை என சொல்ல, இது நீங்க வாங்கி கொடுத்தது தான் என பாக்கியா சொல்கிறார். அதே நேரத்தில் அங்கே ராதிகாவும் வருகிறார். ஆனால் அவர் கோபியை பார்க்காமல் இருக்கிறார்.

பின் கோபியின் தந்தை பாக்கியாவிற்கு போன் செய்கிறார். பாக்கியா திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக சொல்கிறார். ராதிகா மேடையில் நிற்க கோபி மற்றும் பாக்கியா கவனிக்காமல் இருக்கின்றனர். அதே போல கோபி மற்றும் பாக்கியா வரும் போது ராதிகா பார்க்காமல் இருக்கிறார். கோபி இனிமேல் சொந்தகாரங்க நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடாதே என சொல்கிறார். பின் கோபி பாக்கியா சாப்பிட செல்ல ராதிகாவும் சாப்பிட போகிறார்.

ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அவர் கோபியை பார்க்க கோபி பாக்கியாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். கோபியும் ராதிகாவை பார்க்க முகத்தை மறைந்து கொள்கிறார். பின் ராதிகா பாக்கியாவின் புடவையை பார்க்க இது அவர் விருப்பத்துடன் எடுத்த புடவை என நினைக்கிறார். ஆனால் கோபி பொய் சொன்னதை நினைத்து பார்க்கிறார். கோபி பாக்கியாவிற்கு ஊட்டி விட அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா சாப்பாட்டை கோபி மீது சிந்திவிட அதை துடைத்துவிடுகிறார். அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

ராதிகா நடந்ததை எல்லாம் பார்த்து குழப்பத்தில் இருக்க, கோபி சொன்ன பொய் எல்லாத்தையும் நினைத்து பார்க்கிறார். பின் அம்மா சொன்னதை நினைத்து செய்த தப்பை உணருகிறார். கோபி சொன்னது எல்லாம் பொய் என ராதிகா அழ,எதற்கு என்னிடம் பொய் சொல்லவேண்டும் என நினைத்து கொண்டே செல்கிறார். இனியா செழியனிடம் இந்த பாட்டிற்கு தான் டான்ஸ் ஆட போகிறோம் என சொல்கிறார். அப்போது பாக்கியா வர செழியனிடம் சாப்பிட்டியா என கேட்கிறார். ஜெனி அக்கா உன்னிடம் பேசினார்களா என இனியா கேட்க, இன்னும் உன் மீது கோவமாக தான் இருப்பதாக இனியா சொல்கிறார்.

சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இனியாவிடம் செழியன் உன்னிடம் பேசுவாளா என கேட்க பேசுவாங்க அவங்க உன்னை பற்றி கேட்பார்கள் என சொல்கிறார். நீ போன் செய்தால் தான பேசுவாங்க என இனியா சொல்ல அவ பேசவே மாட்டேங்குறா என செழியன் சொல்கிறார். இனியா செழியனிடம் கிப்ட் அனுப்பி பாரு என சொல்லி, ஆன்லைனில் ஒரு கிப்ட் காட்டுகிறார். செழியனும் அதை ஆர்டர் செய்ய, அது ஜெனி வீட்டிற்கு போகிறது. அதை ஜெனி வாங்கி பிரித்து பார்க்கிறார். அதில் சாரி என எழுதி அனுப்ப அதை பார்த்த ஜோசப் கோவத்தில் கத்துகிறார். இனிமேல் உன்னை அங்கே அனுப்பவேமாட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!