Home Entertainment ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் காணாமல் போன பணம், கண்ணன் மீது திரும்பிய பழி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கயல் பேரில் போஸ்ட் ஆபிசில் பெரிய பணம் சேமித்து வைக்கிறார். பின் ஜனார்த்தனன் கடையில் பணம் காணாமல் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் தனத்தின் அம்மா மீனாவை திட்டிய கோவத்தில் கண்ணனை திட்டுகிறார். உன்னால் தான் என் மகள் திட்டு வாங்குகிறாள் அதை கேட்டு நான் பொறுமையாக இருக்க வேண்டுமா என ஜனார்த்தனன் சொல்ல, மறுபடியும் வேலையை பாருங்க என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி கடைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கிறார். தனம் கடைக்கு போகவில்லையா என கேட்க, மகன் பிறந்ததில் இருந்து எனக்கு அவனுடைய இருக்கணும் போல இருக்கிறது என மூர்த்தி சொல்கிறார்.

அப்போது போஸ்ட் ஆபிசில் இருந்து ஒருவர் வருகிறார். அவரிடம் கயல் பெயரில் பணம் போட வேண்டும் என சொல்ல, மாதம் 5000 ரூபாய் கட்ட வேண்டும் என அவர் சொல்கிறார். தனம் பையனுக்கும் அவர் போட சொல்ல ஆனால் வேண்டாம் என தனம் சொல்கிறார். நாளை வந்து பணம் வாங்கி கொள்வதாக அவர் சொல்ல அந்த நேரம் மீனா வருகிறார். யாரு இது என கேட்க, போஸ்ட் ஆபிசில் இருந்து வந்துருக்காங்க என சொல்கிறார். ஆனால் கயலுக்காக பண்ணுவதாக சொல்லாமல் இருக்க மீனா தனத்தின் குழந்தைக்கு என நினைத்து கொள்கிறார்.

சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மறுபக்கம் ஜனார்த்தனன் கடை முழுவதையும் கண்ணன் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் விட ஐஸ்வர்யா பணத்தை எண்ணி கட்டி வைக்கிறார். அதை கடையில் வேலை செய்யும் மற்றொருவர் பார்த்துக் கொண்டே இருக்க ஐஸ்வர்யா எழுந்து சென்ற நேரம் பார்த்து காசை எடுத்துவிடுகிறார். பின் ஜனார்த்தனன் வந்து காசை கேட்க, ஐஸ்வர்யா காணவில்லை என சொல்கிறார். ஜனார்த்தனன் கண்ணன் மீது சந்தேகப்பட ஐஸ்வர்யா அவர் எடுக்கவில்லை என சொல்கிறார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அறிவிப்பு!

ஜனார்த்தனன் பணத்துடன் தான் வர வேண்டும் என பயங்கரமாக திட்டி அனுப்ப என்ன செய்வது என தெரியாமல் வெளியே நிற்கின்றனர். அந்த நேரம் அங்கே கதிர் வருகிறார். எதோ தப்பாக இருப்பதை உணர்ந்த அவர் என்ன நடந்தது என கேட்கிறார். ஐஸ்வர்யா நடந்ததை சொல்ல அவர் எப்படி அப்படி சொல்லலாம் வா சென்று கேட்போம் என கதிர் சொல்கிறார். ஆனால் கண்ணன் அதெல்லாம் வேண்டாம் எனக்காக யாரும் பேசவேண்டாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here