விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா, அதிர்ச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா, அதிர்ச்சியில் கோபி - இன்றைய
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா, அதிர்ச்சியில் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா, அதிர்ச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா கோபியை பார்த்தாலே கோவமாக இருக்க பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. பின் கோபியிடம் ராதிகா போன் செய்து நாளை வக்கீல் அலுவலகத்திற்கு போக வேண்டும் என சொல்கிறார். பின் பாக்கியாவிடம் கோபி கையெழுத்து கேட்க அதை படித்து கூட பார்க்கலாம் கையெழுத்து போடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இனியா செழியன் என அனைவரும் அமர்ந்திருக்க, கோபி ஜெனி எங்கே என கேட்கிறார். ஜெனி தாத்தாவுடன் இருப்பதாக சொல்ல சென்று கூட்டிக் கொண்டு வர சொல்கிறார். ஜெனி எழில் தாத்தா என அனைவரும் சாப்பிட ஒன்றாக சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கிறது என ஈஸ்வரி சொல்கிறார். மாதத்திற்கு ஒரு முறையாவது இப்படி சாப்பிட வேண்டும் என ஈஸ்வரி சொல்ல, தாத்தா வந்ததும் கோபி வேகவேகமாக சாப்பிடுகிறார். அதை பார்த்து தாத்தா கோவப்பட ஏன் எப்போ பார்த்தாலும் அவனை பார்த்து கோவப்படுறீங்க என ஈஸ்வரி கேட்கிறார்.

“பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்” திறப்பு விழாவிற்கு வந்த குடும்பத்தினர், ரங்கோலி போட்டு அசத்திய ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

அப்போது செழியன் அப்பாவை வேகமாக சாப்பிட வேண்டாம் என சொல்கிறார் போல என சொல்ல, பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. மறுபக்கம் கோபி தாத்தாவை நினைத்துக் கொண்டிருக்க ராதிகா போன் செய்கிறார். ராதிகா சாப்பிடீங்களா என பேசிவிட்டு நாளை வக்கீலை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் என ராதிகா சொல்கிறார். கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைய கையெழுத்து வாங்கிட்டிங்களா நாளை மறுநாளே நீதிமன்றம் போகலாம் என ராதிகா சொல்கிறார்.

அதை கேட்டு கோபி பதட்டம் அடைய சரி சரி என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அப்போது கோபி வக்கீல் சொன்னதை நினைத்து பார்த்துக் கொண்டே இருக்க அந்த நோட்டீசை எடுத்து பார்க்கிறார். அப்போது பாக்கியா வருவது போலவும் நோட்டீஸ் பற்றி சொல்ல காபி கப்பை கீழே போட்டு உடைப்பதாக நினைத்து பார்க்கிறார். அப்போது பாக்கியா நிஜமாகவே வர கோபிக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துவிட்டு செல்கிறார். ஆனால் கோபி எதுவும் சொல்லாமல் இருக்க எதுவும் வேண்டாமே என கேட்டு பாக்கியா செல்கிறார்.

கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் – இன்றைய எபிசோட்!

பின் கோபி பாக்கியாவை கூப்பிட கூப்பிட்டிங்களா என பாக்கியா வருகிறார். இதில் கையெழுத்து வேண்டும் என கோபி கேட்க, பாக்கியா எதுவும் கேட்காமல் கையெழுத்து போடுகிறார். அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைய பாக்கியாவிடம் தேவையான இடங்களில் கையெழுத்து வாங்குகிறார். பாக்கியா எல்லாத்தையும் போட என்ன பேப்பர் என பார்க்கமாட்டியா என கேட்கிறார். நீங்க படித்தால் போதும் என பாக்கியா சொல்ல, கோபி அதிர்ச்சியில் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!