‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை காவ்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது – நெகிழ்ச்சி பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை காவ்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது - நெகிழ்ச்சி பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை காவ்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது - நெகிழ்ச்சி பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை காவ்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது – நெகிழ்ச்சி பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை காவ்யாவுக்கு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது ஒன்று தனியார் மீடியா அமைப்பினரால் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காவ்யா

வழக்கமாக சீரியல்களை பொருத்தளவு, குறிப்பிட்ட ஒரு கேரக்டரில் நடிக்கும் நடிகர் அல்லது நடிகைகள் அதற்கு ஏற்ற ரீச் கிடைக்கும் போது சீரியலின் கதாப்பாத்திரமாகவே மாறி விடுவது உண்டு. அதாவது ஒரு சீரியலில் நடிகர் அல்லது நடிகைகள் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்கள் பின்னாட்களில் அவர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது தான் ஒரு கலைஞனின் வெற்றிக்கு அடையாளமாகவும் சொல்லப்படுகிறது.

Vijay TV Bigg Boss Season 5 | நிலம் நாணயத்தை வைத்து ஆட்சியை கைப்பற்றிய நிரூப் – ப்ரோமோ ரிலீஸ்!

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளின் ரீல் கதாப்பாத்திரமும் ரசிகர்களால் ரியலாக தான் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதிர் மற்றும் முல்லை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் குமரன் மற்றும் விஜே சித்ராவின் நடிப்பு தமிழ் மக்களின் ரசனைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்தனர்.

ஆனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ராவின் மறைவுக்கு பிறகு முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை காவ்யா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கும் முல்லை என்கிற ரோலில் சித்ராவின் இடத்தை நிரப்ப முயற்சித்து வரும் காவ்யா அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதிலும் சமீபகாலகாம ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை காவ்யாவுக்கு தற்போது ஒரு விருது கிடைத்துள்ளது.

சன் டிவி “ரோஜா” சீரியலில் இருந்து விலகும் வில்லி அனு? காரணம் இது தானாம்!

அதாவது RFE என்கிற ஒரு தனியார் மீடியா அமைப்பின் மூலம் இந்த ஆண்டு சின்னத்திரை தொடர்களின் சிறந்த நடிகைக்கான விருதை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை காவ்யா பெற்றுள்ளார். இந்த விருதுக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவருக்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!