மே 1 முதல் ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் உயர்வு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!

0
மே 1 முதல் ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் உயர்வு - மாநில அமைச்சரவை ஒப்புதல்!
மே 1 முதல் ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் உயர்வு - மாநில அமைச்சரவை ஒப்புதல்!
மே 1 முதல் ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் உயர்வு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!

கேரளாவில் பேருந்து ஆட்டோ கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட தொழில் சரிவால் ஏராளமானோர் தங்களின் வாழ்வாதாரம் இழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்தது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் உள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மேலும் மக்களை துயரத்திற்கு ஆளாக்கியது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது கேரளாவில் பேருந்து ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மே மாதத்தில் இருந்து பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – கல்வித்துறை முடிவு!

இது குறித்து கேரள சட்டமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், குறைந்தபட்ச டாக்சி கட்டணம் ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம் 90 பைசாவில் இருந்து ரூ.1 ஆக உயர்த்தப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி விரைவு பயணிகள், சூப்பர் பாஸ்ட் மற்றும் டீலக்ஸ் சேவைகளின் கட்டணங்களும் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200 ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்படுகிறது. இதில் ஒரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் திருத்தியமைக்கப்பட்ட போது, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 7-ல் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கட்டண உயர்வுக்கு எரிபொருள் உயர்வே முக்கிய காரணம் என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!