ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு.. இனி எல்லாம் ஆன்லைன் தான் – ரயில்வே நிர்வாகம் புதிய வசதி!

0
ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு.. இனி எல்லாம் ஆன்லைன் தான் - ரயில்வே நிர்வாகம் புதிய வசதி!
ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு.. இனி எல்லாம் ஆன்லைன் தான் - ரயில்வே நிர்வாகம் புதிய வசதி!
ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு.. இனி எல்லாம் ஆன்லைன் தான் – ரயில்வே நிர்வாகம் புதிய வசதி!

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல டிஜிட்டல் இந்தியா திட்டம் அமலில் இருக்கிறது. இந்நிலையில் ரயில்வே துறையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்த புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அது பற்றி முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில்வே துறை:

இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டம் பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ரயில்வே துறையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அப்டேட் ஆகி இருக்கிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 8878 நிறுவனங்களில், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளில் விலையை அச்சிட்டு கொடுக்க கையடக்க எந்திரங்கள் (Handheld PoS machine) கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை 596 ரயில்களில் 3081 கையடக்க விற்பனை பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4316 உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த எந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வேலை பறிபோகும் அபாயம்.. பதற்றத்தில் ஐடி ஊழியர்கள் – மிகுந்த கண்டிப்பாகும் நிறுவனங்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிகாக இ- கேட்ரிங் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் ரயில் பயணிகள் பயண சீட்டை இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் போதே தேவையான உணவுகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வைத்து கொள்ளலாம் அல்லது பயணம் செய்யும் போது செயலி, சேவை மையம், இணையதளம் போன்றவை மூலமாகவோ அல்லது 1323 என்ற எண் மூலம் உணவுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது 310 ரயில் நிலையங்களில் இருக்கிறது. இந்த வசதி மூலமாக ஒரு நாளுக்கு 41,844 உணவு வகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!