TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 17 ம் தேதி திருப்புதல் தேர்வு!

1
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 17 ம் தேதி திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 17 ம் தேதி திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 17 ம் தேதி திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்களுக்கு உதவும் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய ஆன்லைன் திருப்புதல் தேர்வை நடத்த உள்ளது.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் குரூப் 4 தேர்வின் கீழ் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் இந்தாண்டு தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இரண்டாம் பகுதி பொது அறிவு பதில் ஆகும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அப்போது தான் அவர்களது மற்ற பாட வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.மேலும் தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (17.07.2022) ஆன்லைன் திருப்புதல் தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

TNPSC Group4 Full Revision Test 02

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!