பிரதான் மந்திரி PM கிசான் திட்ட கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு – இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

0
பிரதான் மந்திரி PM கிசான் திட்ட கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு - இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
பிரதான் மந்திரி PM கிசான் திட்ட கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு - இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

பிரதான் மந்திரி PM கிசான் திட்ட கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு – இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

மத்திய அரசு விவசாயிகளுக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சில நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயனாளிகள் கவனத்திற்கு

இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 10 தவணை வரை உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11வது தவணை தொகை எப்பொழுது வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இதில் பல்லாயிரக்கணக்கான போலி விவசாயிகள் பயன் அடைந்து வருவதாக கண்டறியப்பட்டது. அதனால் முறைகேடுகளை தவிர்க்க இத்திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் கட்டாயமாக தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வருகிற மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் e-KYC விவரங்களை சரி பார்த்தவர்களுக்கு மட்டுமே 11வது தவணை தொகை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு சில நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

1. இத்திட்டத்தின் கீழ் நிறுவன நில உரிமையாளர்கள் யாரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது

2. அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் இதற்கு முன்னாளில் பதவியில் இருந்தவர்கள்.

3. இதையடுத்து முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் லோக்சபா அல்லது ராஜ்யசபா/ மாநில சட்டப்பேரவைகள் அல்லது மாநில சட்ட மேலவைகளின் முன்னாள்/தற்போதைய உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் முன்னாளில் மேற்கண்ட பதவிகளில் பதவி வகித்தவர்கள்.

3. மேலும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பெறும் அனைத்து ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

4. மத்திய/மாநில அரசு அமைச்சகங்கள், அலுவலகங்கள், துறைகள் மற்றும் அதன் களப் பிரிவுகளான மத்திய அல்லது மாநில PSEகள் மற்றும் அரசாங்கத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள்.

5. கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள்.

6. மேலும் பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் & கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் PM Kisan திட்டத்தில் பயன் பெற தகுதியற்றவர்கள்.

7. அத்துடன் தொழில்முறை அமைப்புகளில் பதிவு செய்து, தொழில் புரிபவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற தகுதியற்றவர்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!