Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.5,000 வரை வருமானம் தரும் அசத்தல் திட்டம்!
இந்திய அஞ்சல்துறை வழங்கும் தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் மூலம் கணக்குதாரர் மாதம் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம். இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் மக்கள் தங்களது சேமிப்புகளை எடுத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தனர். அத்தகைய காலகட்டத்தில் இதுவரை சேமிப்பு செய்யாதவர்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர். இந்த நிலையில் மக்கள் வருங்காலத்தை எண்ணி சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டினர். இவர்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது வங்கிகளை தொடர்ந்து அஞ்சல் துறையில் பல்வேறு வகையான புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.5,000 வரை வருமானம் பெறலாம். திட்டத்தில் 1000 ரூபாய் கொண்டு கணக்கு துவங்கலாம். இதில் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்டும் உள்ளது. தனிநபர் கணக்கில் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்டில் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுதோறும் 6.6% வட்டி விகிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இவை முடிந்த பிறகு மாத வருமானத்தை பாலிசிதாரர் பெறலாம். அதாவது மொத்தம் ரூபாய் 4.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடங்களுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 2,500 கிடைக்கும். அதே ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டத்தின் 6.6 சதவீத வருடாந்திர வட்டியின் படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.59,400 வருமானம் கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.4,950 வருமானமாக கிடைக்கும். நீங்கள் சேமித்த தொகையை 1 வருடத்திற்கு முன் எடுக்க முடியாது. முதிர்வு காலம் முடிந்ததும் நீங்கள் பணத்தை எடுத்தால் தான் திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்