PG TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ‘இதனை’ செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

0
PG TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - 'இதனை' செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
PG TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - 'இதனை' செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
PG TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ‘இதனை’ செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு PSTM சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதனை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

PSTM சான்றிதழ்

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான கணினி வழித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 16 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 859 பேர் எழுதினார்கள். இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வில் விண்ணப்பித்த தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு சான்றாக புதிய விதிமுறைகளின்படி தமிழ்வழி சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை என தேர்வர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, PSTM சான்றிதழை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்ய முடியாத காரணத்தால் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி அன்று பிற்பகல் 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய முகவரி குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!