திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு!

0
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு!

செப்டம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட் வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அங்கப்பிரதட்சண டோக்கன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருவதுண்டு. அதிலும், வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முடி காணிக்கை செய்ய வருகின்றனர். நாள் ஒன்றிற்கு மட்டுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

மேலும், கோடி கணக்கில் உண்டியல் காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட்களை ஆன்லைனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட் ஆகஸ்ட் 22 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிட போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதனை’ செய்யாவிடில் அபராதம்!

Exams Daily Mobile App Download

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, திருமலையில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மட்டும் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கப்பிரதட்சணம் செய்ய இருக்கும் பக்தர்கள் குறிப்பிட்டுள்ள தேதியை தவிர்த்து மீதமுள்ள நாளில் அங்கப்பிரதட்சண செய்வதற்கான முன்பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!