CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வை கடந்த ஆண்டு இறுதியில் நடத்தி இருந்த நிலையில், தேர்வு முடிவை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகளின்படி, CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பருவத்தேர்வு முடிவுகள் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இருப்பினும், சரியான தேதி மற்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் – முக்கிய கோரிக்கைகள்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
ஆனால் தேர்வு முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in, cbseresults.nic.in மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இது தவிர CBSE தேர்வு முடிவுகள் UMANG செயலி மற்றும் DigiLocker செயலியிலும், digilocker.gov.in என்ற இணையதளத்திலும் வெளியாகும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த செயலிகள் அனைத்தும் Google PlayStore லிருந்து கிடைக்கிறது.
மேலும், அனைத்து மாணவர்களும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகளை ஐவிஆர்எஸ் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சரி பார்க்கலாம். இந்த முறைகளைப் பயன்படுத்தி முடிவுகளைப் பெற, மாணவர்கள் CBSE வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை பயன்படுத்த வேண்டும். இதற்கிடையில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வி வங்கிகளை cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.