அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம் இதோ!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம் இதோ!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இந்தியாவில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு முதிர்வு காலத்தில் மேலும் அதிக பலனை தரும் சேமிப்பு திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

சேமிப்பு திட்டங்கள்

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது முதிர்வு காலத்தில் அவர்களுக்கு பேருதவியாக உள்ளது. ஆனால் அதிகரித்து வரும் விலையேற்றத்தால் இந்த ஓய்வூதிய தொகையை வைத்து சமாளிப்பது சற்று கடினமானதாக இருக்கும். அதனால் முதிர்வு காலத்தில் மேலும் வருவாய் பெற்று தரும் வகையில் இவர்களுக்கென்று சூப்பரான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, இதில் சேமிப்பு கணக்கை தொடங்குவதன் மூலமாக முதிர்வு காலத்தில் அதிக சேமிப்பு பணத்தை பெற முடியும்.

Exams Daily Mobile App Download
தற்போது 5 சூப்பரான சேமிப்பு திட்டத்தை பற்றி பார்ப்போம்.

1. SCSS சேமிப்பு திட்டம்:

  • மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்புத் திட்டமானது ஐந்து ஆண்டுகள் வரை முதிர்வு காலத்தை கொண்டது. ஆனால் மேலும் நீங்கள் 3 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
  • இதில் ஆண்டுக்கு 7.4% வட்டிவிகிதம் வழங்கப்படுவதுடன் பிரிவு 80Cயின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
  • இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியும். அத்துடன் இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

2. POMIS வருமானத் திட்டம்:

  • தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
  • மேலும் இதில் கூட்டு உரிமையின் கீழ் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் மற்றும் ஒற்றை உரிமையின் கீழ் ரூ.4.5 லட்சம் வரை செலுத்தலாம்.
  • அத்துடன் இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டியை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம். இதே போல் உங்களின் தொடர் வைப்புத்தொகைகளுக்கும் மாற்றி கொள்ளலாம்.

3. PMVVY சேமிப்பு திட்டம்:

  • பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.40% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் பெற முடிகிறது.
  • இத்திட்டம் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இத்திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என ஓய்வூதியத் தொகையை பெற முடியும். உங்களுக்கு விருப்பமான ஒரு கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம்.

TVS Motors நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.!

4. ஃப்ளோட்டிங் வட்டி விகித சேமிப்பு பத்திரம்:

  • ஃப்ளோட்டிங் வட்டி விகித சேமிப்பு பத்திரம் திட்டத்தில் 7 வருடங்களுக்கு பிறகு உங்களால் சேமிப்பு தொகையை திரும்ப பெற முடியும்.
  • இத்திட்டத்தில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
  • மேலும் இத்திட்டத்தில் முதியவர்கள் முதிர்வு காலம் முடிவதற்குள் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதிகளும் உள்ளது.

5. FD திட்டம் :

  • ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
  • இதில் மூத்த குடிமக்களுக்கான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 0.5% வரை கூடுதலாக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
  • மேலும் வரியைச் சேமிக்க விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு, ஐந்தாண்டு வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!