அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை கால அவகாசம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஜூன் 30 வரை கால அவகாசம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஜூன் 30 வரை கால அவகாசம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை கால அவகாசம்!

ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கியது. வழங்கப்பட்ட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் இதனை செய்யாவிட்டால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு மார்ச் 31 ஆக இருந்தது. மத்திய அரசு அதை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் விரைந்து அதை முடித்துவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. வழங்கப்பட்ட கால அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளத்தால் விரைந்து இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாக அலுவலகத்திற்கு சென்றும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைக்கலாம்.

  • முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் ‘Start Now’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • இப்போது ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி submit கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!