அதிகரிக்கும் ஓய்வூதியத்தொகை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
அதிகரிக்கும் ஓய்வூதியத்தொகை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அதிகரிக்கும் ஓய்வூதியத்தொகை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அதிகரிக்கும் ஓய்வூதியத்தொகை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மத்திய அரசின் அடல் பெண் பிரயோஜன திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதியம்:

பணி ஓய்வுக்குப் பிறகு முதுமை காலத்தில் பொருளாதார பிரச்சனை இன்றி வாழ ஓய்வூதியம் அவசிய ஒன்றாக உள்ளது. சரியான திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்தால் 60 வயதிற்கு மேல் மாதந்தோறும் கட்டாயம் ஓய்வூதியம் கிடைக்கும். அத்தகைய திட்டங்களில் ஒன்று மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா. இத்திட்டத்தில் உங்களது முதலீட்டு தொகைக்கு ஏற்றுவாறு குறைந்தது 1000 முதல் 5000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். 18 வயது பூர்த்தி அடைந்த நபர் இந்த திட்டத்தில் இணையலாம்.

நீங்கள் திட்டத்தில் 40 வயது வரை முதலீடு செய்யலாம். உங்களுக்கு 60 வயது ஆனவுடன் மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 215 செலுத்தினால் 60 வயதிற்கு பிறகு மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது திட்டத்திற்கான ஓய்வூதிய தொகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் சேரும் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசு இந்த முடிவு எடுக்கலாம் என தகவல் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!