ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான உதவி ஃபோர்மேன் மற்றும் மைனிங் மேட் காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்:

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் இந்தியா முழுவதும் பல முக்கிய மாநிலங்கள் அனைத்திலும் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளது. இந்நிறுவனத்தில் உதவி ஃபோர்மேன் மற்றும் மைனிங் மேட் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் சுரங்க பொறியியலில் டிப்ளமோ படிப்புகளுடன் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பள்ளி படிப்புடன் சம்பந்தபட்ட துறையில் 6 வருட முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

உதவி ஃபோர்மேன் பதவிக்கு ரூ.18,480 முதல் ரூ.45,400 வரையும், மைனிங் மேட் பதவிகளுக்கு ரூ.18,280 முதல் ரூ.38,670 வரையும் மாத ஊதியம் வழங்கப்படும். மொத்தம் இப்பணிக்கு 26 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, 35 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வர்த்தக சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பத்திற்கு பொது பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

ஏஜிஎம் (நிர்வாகம்) – எச்.ஆர்

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

மலஞ்ச்கண்ட் செப்பு திட்டம்

தெஹ்ஸில்: பிர்சா

பி.ஓ- மலஞ்ச்கண்ட்

மாவட்டம்-பாலகாட்

மத்தியப் பிரதேசம் -481116.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!