திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியீடு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட உள்ளது.

தரிசன டிக்கெட்

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் திருப்பதிக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக பக்தர்களுக்கு நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் 2ம் தேதி அன்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 2ம் தேதி அன்று ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தோமாலை சேவை, அர்ச்சனை, வசந்த உற்சவம் உள்ளிட்ட சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மற்றும் ஜூன் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வருகிற 20ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் இணையதளத்தில் வெளியிட உள்ளது. இதனை முன்பதிவு செய்ய விரும்புவர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அத்துடன் ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!