SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? – இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? - இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? - இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? - இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? – இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் மத்திய பணியாளர் தேர்வாணையம் விரைவில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் SSC தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

பயிற்சி வகுப்புகள்:

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அரசு துறை வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் அரசு துறையில் காலிப்பணியிடங்கள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் வேலை சுமை அதிகரித்துள்ளது. மேலும் இவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து துறைகளுகளிலும் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து ஏராளமானோர் வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். அரசு வேலை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். அதனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் தேர்வர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தயார் படுத்த தொடங்கி விடுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில், வரவுள்ள SSC பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே பா.. WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத கலக்கல் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அத்தேர்வுக்கான இலவச பயிற்சி செப்டம்பர் 21 ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெற விரும்புவார்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகுதி உடையோர் 9597557913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரியை அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!