விஜய் டிவி “அரண்மனை கிளி” ஜானு மோனிஷா யார் தெரியுமா? குடும்ப வாழ்க்கை டூ சீரியல் நடிகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மோனிஷா. தற்போது அவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரண்மனை கிளி ஜானு மோனிஷா:
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய் டிவி அரண்மனை கிளி சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மோனிஷா. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சீரியல் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்த ரட்சிதா சீரியலில் இருந்து விலகியதால் அந்த கதாபாத்திரத்தில் தற்போது ஜானு மோனிஷா நடித்து வருகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் – கணவர் வெளியிட்ட பதிவு!
மோனிஷாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இதை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார். அவரின் சொந்த ஊர் கேரளா. கல்லூரி படிப்பு முடித்தவுடனே மலையாள சீரியலில் ஜானு அறிமுகமானர். அப்போது ஜனனிக்குட்டி என்ற பெயரில் அவர் கதாபாத்திரம் இருந்தது. இதற்கிடையில் அவர் மாடலிங் செய்து வந்தார். அவருக்கு முதலில் சரியாக தமிழ் பேச தெரியாமல் இருந்தது. அதன் பின் சீரியலில் நடித்ததன் மூலமாக தற்போது நன்றாக தமிழ் பேசுகிறார்.
கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! அடுத்த ட்விஸ்ட்!
அவரின் கணவர் கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஆவார். ஒருபக்கம் குடும்பம், மறு பக்கம் சீரியல், மாடலிங் என பிசியான லைஃப் ஸ்டைலை அழகாக மேனேஜ் செய்கிறார். இதனால் ஜானுவின் நண்பர்கள் வட்டாரம் அவரை கண்டு பொறாமைப்படுவார்களாம். இந்நிலையில் அரண்மனை கிளி சீரியல் நிறுத்தப்பட்டதால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். தற்போது மீண்டும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அவருக்கு வாய்ப்பு வழங்கியதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.