‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் – கணவர் வெளியிட்ட பதிவு!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் - கணவர் வெளியிட்ட பதிவு!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் - கணவர் வெளியிட்ட பதிவு!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் – கணவர் வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவுக்கு தற்சமயம் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், வெண்பாவின் குழந்தை என்கிற பெயரில் வெளியான வீடியோவை எதிர்த்து பரினாவின் கணவர் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரினா. இந்த தொடரில் வில்லியாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்த நடிகை பரினா தற்போது நடிப்பதில் இருந்து ஒரு சிறிது ஓய்வு எடுத்திருக்கிறார். அதாவது திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் கர்ப்பமான நடிகை பரினாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! அடுத்த ட்விஸ்ட்!

இந்த தகவலை வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது பிரசவத்துக்காக சீரியலை விட்டு சில காலம் விலகி இருக்கும் பரினா விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ குழுவுடன் வந்து இணைவார் என தெரிகிறது. இந்த சந்தோஷமான தருணத்தை அவரது குடும்பத்தார் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், பரினாவின் கணவர் ரஹ்மான் வலைதளங்களில் சில பதிவுகளை வெளியிட்டு கோபத்தில் கொந்தளித்துள்ளார். அதாவது யூடியூப் சேனல் ஒன்றில் வெண்பாவின் குழந்தை என்ற பெயரில் ஒரு குழந்தையின் வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது.

ஜெனியை தீபாவளிக்கு அழைக்கும் பாக்கியா, வெளிநாட்டிற்கு செல்ல முடிவெடுக்கும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இது நடிகை பரினாவின் கணவர் ரஹ்மானின் கவனத்திற்கு வர, ‘இது எங்களுடைய குழந்தை கிடையாது. இது போன்ற போலியான செய்திகளை ரசிகர்கள் ஷேர் செய்ய வேண்டாம். இந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்காவிட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் வீடியோவை கவனிக்கையில், அது வேறு ஒருவரது குழந்தை என்றும், அந்த குழந்தைக்கு வெண்பா என பெயர் வைத்திருப்பதாகவும், குறிப்பாக அந்த வீடியோ 10 மாதங்களுக்கு முன்னதாக பதிவிடப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!