TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TCS நிறுவனம் தற்போது வளாகத்திற்கு வெளியே மேற்கொள்ளும் ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை பணியமர்த்த இருக்கிறது. இப்பணிக்கான தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பிற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் TCS நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இப்பணிக்கு புதிய பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றாலும் அவர்களைத் தவிர, 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? இன்றே கடைசி நாள்! முக்கிய கோரிக்கை!

இப்போது TCS நிறுவனத்தின் அட்லஸ் பணியமர்த்தல் சோதனை அட்டவணை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இப்பணிக்கான தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப படிநிலைகளை இங்கே பார்க்கலாம்.

விண்ணப்ப செயல்முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் TCS நிறுவனத்தின் https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring என்ற போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில், TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கவும்.
  • இதில் இரண்டு இணைப்புகள் இருக்கும்.
  • விண்ணப்பதாரர்கள் TCS இணையதளத்தில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட பயனராக இருந்தால், அவர்கள் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • அந்த வகையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பிறகு ‘Apply For Drive’ என்பதை கிளிக் செய்யவும்.
  • ஒருவேளை விண்ணப்பதாரர்கள் புதிய பயனராக இருந்தால், ‘இப்போது பதிவுசெய்க’ என்பதைக் கிளிக் செய்து,‘IT’ எனத் தேர்ந்தெடுத்து விவரங்களை நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, “Driveக்கு விண்ணப்பிக்கவும்” என்பதை கிளிக் செய்யவும்.
  • நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதைச் சரிபார்க்கவும்.

கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டில் B.E./B.Tech/M.E./M.Tech/MCA/M.Sc படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளோமா (பொருந்தினால்), பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பு ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச 60% அல்லது 6 CGPA மதிப்பெண்கள் தேவை.
  • மாணவர்கள் தங்கள் கல்வியை குறிப்பிட்ட கால இடைவெளியில் முடித்திருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள பேக்லாக் எதுவும் இருக்கக்கூடாது
  • கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • அதிகபட்ச கல்வித் தகுதி வரை ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பொருத்தமான ஆவணச் சான்று மூலம் கல்வியில் உள்ள இடைவெளிகள் சரிபார்க்கப்படும்
  • மேலும் முழுநேர படிப்புகள் மட்டுமே கருதப்படும்

பணி அனுபவம்:

2 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

வயது:

டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறையில் பங்கேற்பவர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!