உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் – EPFO முக்கிய அறிவிப்பு!

0
உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் - EPFO முக்கிய அறிவிப்பு!
உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் - EPFO முக்கிய அறிவிப்பு!
உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் – EPFO முக்கிய அறிவிப்பு!

ஓய்வூதியதாரர்கள் உயர் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தான முக்கிய அறிவிப்பை EPFO தற்போது வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியம்

இந்தியாவில் உள்ள ஓய்வூதிய ஊழியர்கள் தங்களுக்கான உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது சந்திக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கான முக்கிய சுற்றறிக்கையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த பிறகு ஏதேனும் பிழை இருந்தால் என்ன செய்வது அல்லது கூட்டு விண்ணப்ப படிவத்திலேயே ஏதேனும் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் ஒரு முதலாளி கூட்டு விண்ணப்ப படிவத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்கான முழு விளக்கத்தையும் தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் தெரிந்த தூய்மை பணியாளர் நியமனம் – நீதிமன்றம் பரிந்துரை!

அதாவது, ஓய்வூதிய ஊழியர்கள் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த பிறகு விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் அலுவலகத்திலேயே ஆய்வு செய்யப்படும். இதன் பின்னர் EPFO அமைப்பால் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்படுகிறது. இதனை அடுத்து கூட்டு விண்ணப்ப படிவம் முதலாளி அவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை எனில் முதலாளிக்கு அதனை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் அந்த ஒரு மாத காலத்திற்குள் பிழைகள் திருத்தப்பட்டு ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு வழங்கப்படும் என EPFO அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!