அஜித்தின் வலிமை vs ரஜினியின் அண்ணாத்த – தீபாவளி ரிலீஸ்!

0
அஜித்தின் வலிமை vs ரஜினியின் அண்ணாத்த - தீபாவளி ரிலீஸ்!
அஜித்தின் வலிமை vs ரஜினியின் அண்ணாத்த - தீபாவளி ரிலீஸ்!
அஜித்தின் வலிமை vs ரஜினியின் அண்ணாத்த – தீபாவளி ரிலீஸ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை மற்றும் ரஜினியின் அண்ணாத்த படமும் திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

மாஸ் ஹீரோ மூவி:

ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் முன்னணி நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தள்ளிப்போன நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!

அதன் பிறகு கடந்த 3ம் தேதி ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்து தமிழகம் திரும்பினர். சமீபத்தில் அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் டேட்டையும் படக்குழுவினர் இம்மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். நவம்பர் மாதம் வலிமை படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரீஎன்ட்ரி கொடுக்க உள்ள கரகாட்டக்காரன் பட நடிகை – அவரே வெளியிட்ட வீடியோ!

இந்த வருடம் தீபாவளிக்கு இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு திரையில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளதால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது போல் கடந்த வருடம் பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசமும் வெளியாகியது. இதில் விஸ்வாசம் தான் அதிக வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!