வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!

0
வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!
வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!
வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகர் பாலா. அவர் நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இருக்கு ஏற்கனவே ஒரு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆன நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் பாலா:

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் பாலா. அவருக்கு இந்த படம் தாம் முதல் படமாக இருந்தது. இந்த படத்தில் வித்யாசாகர் இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக தவமின்றி கிடைத்த வரமே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் என சில படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாள படங்களில் நடிக்க சென்று விட்டார். மேலும் மலையாலத்தில் கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்துள்ளார்.

ரீஎன்ட்ரி கொடுக்க உள்ள கரகாட்டக்காரன் பட நடிகை – அவரே வெளியிட்ட வீடியோ!

அதன் பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் அஜித் நடித்த வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தார். அந்த படத்தின் இயக்குனர் சிவாவின் தம்பி தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் தமிழில் இவர் 2019ல் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா 2010ல் அம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் குறித்த சீக்ரெட் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இவருக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2019ல் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பு கேரளாவில் நேற்று நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!