விஜயின் ‘சர்கார்’ வசூலை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் ‘அண்ணாத்த’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
விஜயின் 'சர்கார்' வசூலை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் 'அண்ணாத்த' - ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜயின் 'சர்கார்' வசூலை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் 'அண்ணாத்த' - ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜயின் ‘சர்கார்’ வசூலை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் ‘அண்ணாத்த’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

பண்டிகை தினமான தீபாவளி அன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் மற்ற திரைப்படங்களை விட ‘அண்ணாத்த’ அதிக அளவில் வசூல் சாதனையை செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படம்:

கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கலவரையறையின்றி மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவும் விகிதம் குறைந்து உள்ளதால், மீண்டும் பல நிலை திரும்பி உள்ளது. பண்டிகை நாளினை கருத்தில் கொண்டு 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று கூறப்பட்டது.

சீரியலில் இருந்து விலகியதற்கு பின் வெண்பா ‘பரீனா’ வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

இதனால் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினியின் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானதால் ரசிகர்கள் பலரும் முதல் ஷோவிற்கு தங்களது குடும்பத்துடன் சென்று திரையரங்கில் திரைப்படத்தினை கண்டு களித்தனர்.

வயிற்றில் குழந்தையுடன் ஜெயிலில் அடைக்கப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் ஷாக்!

இதனை அடுத்து தீபாவளிக்கு வெளியான முதல் நாள் அன்று மட்டும் ‘அண்ணாத்த’ திரைப்படம் 39 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ‘சர்கார்’ திரைப்படம் செய்த சாதனையை விட அதிகம் என்று திரைத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 1100க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் இன்னும் தெரிவிக்கவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!