வயிற்றில் குழந்தையுடன் ஜெயிலில் அடைக்கப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவின் சூழ்ச்சியால் ஜெயிலுக்கு செல்லும் வெண்பா ஜெயிலில் இருப்பது போல வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா
சமீப காலமாக பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்துடன் நகர்ந்து வருகிறது. இதுவரை ஹேமாவை காரணம் காட்டி கண்ணம்மாவை வெறுப்பேற்றி வரும் வெண்பாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக கண்ணம்மா அவரை போலீசில் மாட்டி விடுகிறார். அதாவது டாக்டர் வெண்பா சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதாக சொல்லி அவரை போலீசின் வலையில் சிக்க வைக்கிறார் கண்ணம்மா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ஹீரோ, ஹீரோயின் இவுங்க தான்!
யார் இதை செய்தது என்பதை அறியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் வெண்பாவை கண்ணம்மா நக்கலாக ஒரு லுக் விட வெண்பாவுக்கு ஆட்டம் காட்டி விடுகிறது. மறுபக்கத்தில் வெண்பா அரெஸ்ட் செய்யப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட சௌந்தர்யா குடும்பத்தினருக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் வழக்கம் போல பாரதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெண்பாவை பார்க்க செல்ல அவர் கண்ணம்மா தான் இதற்கெல்லாம் காரணம் என சொல்லி விடுகிறார்.
தனது 2வது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால் – ரசிகர்கள் வாழ்த்து!
இது உண்மை தான் என்றாலும் பாரதியால் கண்ணம்மா மீது கோபப்பட மட்டும் தான் முடியும். இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா கர்ப்பகாலத்தில் இது போன்ற ரிஸ்க் ஆன காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். அந்த வகையில் நடிகை பரினா ஜெயிலில் இருப்பது போல எடுத்திருக்கும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.