சீரியலில் இருந்து விலகியதற்கு பின் வெண்பா ‘பரீனா’ வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் கொடூரமான வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனா தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. பாரதியும், கண்ணம்மாவும் அண்மைக்காலமாக மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது வெண்பாவுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் வெண்பா, அதற்கான சூழ்ச்சிகளை விடாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.
வயிற்றில் குழந்தையுடன் ஜெயிலில் அடைக்கப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
மேலும் கண்ணம்மாவை இரண்டாவது குழந்தை பற்றி சொல்லி மிரட்ட கடுப்பான கண்ணம்மா, வெண்பாவை போலீசிடம் சிக்க வைக்கிறார். இதனால் வெண்பா சிறைக்கு செல்கிறார். வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் சீரியலில் இடைவெளி வேண்டும் என்பதற்காக இந்த கதை மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வெண்பா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ஹீரோ, ஹீரோயின் இவுங்க தான்!
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கு பின் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் wear piece என கேப்சன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என ஆர்வத்துடன் இருக்கின்றனர். பலர் இந்த புகைப்படத்திற்கு நல்ல விதமாக கமெண்ட் செய்து இருக்கின்றனர். தொடர்ந்து இவர் யூடுப்பில் கர்ப்பகால உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.