அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் – சூரப்பாவிற்கு நோட்டிஸ்?

0
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் - சூரப்பாவிற்கு நோட்டிஸ்?
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் - சூரப்பாவிற்கு நோட்டிஸ்?
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் – சூரப்பாவிற்கு நோட்டிஸ்?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக திகழும் சூரப்பா மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் இன்னும் சில தினங்களில் நோட்டிஸ் அனுப்பப்படும் என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்:

நாட்டில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக திகழ்கிறது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இது தரவரிசையில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா திகழ்கிறார். இவர் மீது சில மாதங்களுக்கு முன்பு ஊழல் புகார் எழுந்தது. இதன் காரணமாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஓர் குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. சுமார் ரூ.280 கோடி வரையிலான ஊழல் புகார் துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்துகையில் பலர் இதில் சிக்கியுள்ளனர். தற்போது சூரப்பாவின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கம் நீக்கம்? சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!!

தற்போது புதிய துணைவேந்தரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சூரப்பா மீதான ஊழல் புகாருக்கு முடிவு வராத நிலையில் இன்னும் சில தினங்களில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது. விசாரணைக்குழு சார்பில் அனுப்பப்படும் நோட்டிசுக்கு சூரப்பா அளிக்கும் பதிலை பொறுத்து அவரை நேரில் விசாரணை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here