இனி மதுபான விற்பனை நிலையத்திலும் GPay – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

0
இனி மதுபான விற்பனை நிலையத்திலும் GPay - அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!
இனி மதுபான விற்பனை நிலையத்திலும் GPay - அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!
இனி மதுபான விற்பனை நிலையத்திலும் GPay – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

ஆந்திர மாநிலத்தில் அரசு நடத்தும் மதுபான விற்பனை நிலையங்களில் தற்போது வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது GooglePay, Phone Pay மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக செலுத்தலாம் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் முறை:

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்தியது. தற்போது பெரும்பாலான மதுபானக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் மாநிலத்தில் உள்ள சில்லறை மதுபான விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டது.

பள்ளி மாணவர்களை தாக்கும் கொடிய வைரஸ் – 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! கேரளா அரசு அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தற்கான வசதிகள் தற்போது மாவட்ட மற்றும் மண்டலத் தலைமையகங்கள், உட்பட நகர்ப்புறங்களில் முக்கியமாக அமைந்துள்ள 1,000 சில்லறை மதுபானக் கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) உதவியுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனால் மதுபான நுகர்வோர்கள் GooglePay, Phone Pay மற்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!