H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் – அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!

0
H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!
H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!
H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் – அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் H1B விசா 2022 ஆம் ஆண்டுக்கான பதிவு மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கும் என அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

H1B விசா:

ஒரு வெளிநாட்டிற்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ அந்த நாட்டின் மூலம் அனுமதி வழங்குவதை விசா என்று கூறுவர். வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாச்சாரம் என பல்வேறு வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் கல்வி அல்லது பணிகளுக்காக அங்கு தங்குவதற்கு அமெரிக்க அரசு சார்பில் H1B விசா வழங்கப்படுகிறது.

கடலூர் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 2,401 பேருக்கு பணிநியமன ஆணை!!

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய 85 ஆயிரம் H1B விசா வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான விசா அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. தற்போது வரை 2.25 லட்சம் பேர் இந்த விசா பெற விண்ணப்பித்துள்ளனர். மேலும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பின்படி மதிப்பெண் அடிப்படையில் விசா வழங்க தாமதம் ஆகும். எனவே குலுக்கல் முறையே டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வு – 1312 பேர் ‘ஆப்சென்ட்’!!

இந்த அறிவிப்பு காரணமாக H1B விசா பயனாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விசா பெற அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளனர். அதிபர் அறிவிப்பின்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விவரம் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!