வெளிநாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவித்த புதிய தளர்வு – இந்தியர்களுக்கு ஜாக்பாட்!

0
வெளிநாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவித்த புதிய தளர்வு - இந்தியர்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் பரிந்துரை அடங்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டு மக்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

அமெரிக்கா விசா

அமெரிக்காவில் தங்கி கல்வி பயிலவும், வேலைவாய்ப்பிற்காகவும் பல வெளிநாட்டினர் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா அரசு சார்பில் H1B விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் பரிந்துரை அடங்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெச்1பி விசா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வை மாற்றப்போகும் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஹெச்-4 விசாவில் அமெரிக்காவில் வசித்து வரும் 1 லட்சம் பேருக்கு ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மிட் வழங்கும் முறையைச் செயல்படுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஹெச்-4 விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களில் ஹெச்-1பி விசாவில் இருக்கும் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோர் வர அனுமதி வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்காகக் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்தப் புதிய விதி பெரிய அளவில் பயன்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் புதிய மசோதா மூலம் நீண்ட கால H-1B விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்கு Aging out பாதுகாப்பை வழங்க உள்ளது, குழந்தைகள் எட்டு ஆண்டுகளாக H4 நிலையைப் பெற்று இருந்தால் வொர்க் பர்மிட் வழங்கப்படும். மேலும் K-1, K-2, K-3 ஆகிய 3 பிரிவுகளில் 25000 பேருக்கு வொர்க் பர்மிட், H-4 spouses மற்றும் children கீழ் 1,00,000 பேருக்கு வொர்க் பர்மிட் வழங்கப்பட உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!