‘ராஜா ராணி’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஆலியா மானஸா – கணவர் சஞ்சீவுடன் கோவா விசிட்!

0
'ராஜா ராணி' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஆலியா மானஸா - கணவர் சஞ்சீவுடன் கோவா விசிட்!
'ராஜா ராணி' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஆலியா மானஸா - கணவர் சஞ்சீவுடன் கோவா விசிட்!
‘ராஜா ராணி’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஆலியா மானஸா – கணவர் சஞ்சீவுடன் கோவா விசிட்!

விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயமான நடிகை ஆலியா மானஸா மற்றும் நடிகர் சஞ்சீவ் இருவரும் தங்களது குடும்பத்தாருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்த ஒரு சீரியல் என்றால் அது ‘ராஜா ராணி’ தான். விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த ‘ராஜா ராணி’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தவர்கள் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா. இவர்கள் இருவருக்கும் இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைக்கவே, காலப்போக்கில் இருவரும் காதலில் விழுந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டனர்.

தாத்தா மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாக்கியா – கோபி உதவுவாரா? வைரலாகும் ப்ரோமோ!

இவர்களுக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்பிற்கு பின்பாக மீண்டும் விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகர் சித்துவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ஆலியா மானஸா. அதே போல நடிகர் சஞ்சீவும், தற்போது சன் டிவியில் ‘கயல்’ என்ற நம்பர் 1 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் 2 வது முறை கர்ப்பமான நடிகை ஆலியா மானஸாவுக்கு தற்போது 8வது மாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இருந்தாலும் சீரியல்களில் அதே அளவு ஆர்வத்துடனும், பொறுப்புடனும் நடித்து கொண்டிருக்கிறார் ஆலியா. இப்படி இருக்க சமூக வலைதளமான யூடியூபில் ஒரு சேனலை நடத்தி வரும் ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் ஜோடி அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக அவர்களது குடும்பம் தொடர்பான வீடியோக்கள் இடம்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கூட, நடிகை ஆலியா மானஸாவின் 2வது குழந்தைக்கான ஸ்கேன், ஐலா பாப்பாவின் ஸ்கூல் அட்மிசன் ஆகிய வீடியோக்களை இவர்கள் பதிவிட எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்திருந்தது.

“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இதனை தொடர்ந்து மீண்டுமாக நடிகர் சஞ்சீவ் தனது மனைவி ஆலியா மானஸா மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சுற்றுலா சென்றுள்ளனர். அதாவது சீரியலில் இருந்து கிடைத்த விடுமுறையை குடும்பத்துடன் செலவிடுவதற்காக கோவா சென்றுள்ள ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி, தங்களது பயணம் தொடர்பான வீடியோவை வலைதளங்களில் பதிவிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக ஐலா பாப்பாவின் அட்ராசிட்டிகளும் அந்த வீடியோவில் இடம்பிடிக்க அது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!