“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வருபவர் நடிகை பரீனா. அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ரசிகர் ஒருவரின் நெகட்டிவ் கமெண்ட் ஒன்றிற்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்நிலையில் அந்த கதைக்கு முக்கிய காரணமாக இருக்கும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். அவர் சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வருகிறார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் பிரசவத்திற்கு பின்னர் கூட சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பலவற்றையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில் அதில் ரசிகர் ஒரு நெகட்டிவ் கமெண்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களது குழந்தையுடன் இருங்கள் என கமெண்ட் போட, அதற்கு பரீனா, நீங்கள் வருத்தப்படுவதை நிறுத்துங்கள் அவன் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறான் என கமெண்ட் செய்திருக்கிறார்.

பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!

மேலும் பரீனாவின் கமெண்ட் பார்த்த ரசிகர் ஒருவர் இவருக்கு கமெண்ட் செய்வதை நிறுத்துங்கள், இவரது அக்கவுண்டை பிளாக் செய்யுங்கள். மரியாதை தெரியாத மோசமான பெண் இவர் என்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ந்து பரீனாவிற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் நிலையில் அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!