இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா – கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா - கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா - கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா – கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை ஆல்யா மனசா தற்போது 2ம் முறையாக கர்ப்பமாகியுள்ளது குறித்தும், தொடர்ந்து சீரியலில் நடிப்பது குறித்தும் அவரே ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2:

சின்னத்திரையில் ஒன்றாக நடித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடியாக இருக்கும் பலரில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா ஜோடி முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே காதலித்து வந்தது குறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒன்றாக இணைந்து அப்போதே பல பேட்டிகளை கொடுக்க தொடங்கினர். மேலும், விஜய் டிவி நிகழ்ச்சியிலேயே இவர்களின் நிச்சயம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு அய்லா என்ற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் புதுமண ஜோடி திருமணத்திற்கு பின் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற தொடரிலும், ஆல்யா ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகின்றனர். அதிலும் ஆல்யா இந்த சீரியலில் சந்தியா என்ற ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இன்னும் காவல் அதிகாரியாவது போன்ற காட்சிகள் சீரியலில் வரவில்லை. ஆனால் விரைவில் இது தொடர்பான காட்சிகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆல்யா தற்போது மீண்டும் 2ம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்தது. இதனால் ஆல்யா சீரியலில் இருந்து விலகப்போவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து விளக்கங்களை சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் சேர்ந்து அளித்துள்ளனர். அதன்படி, உண்மையிலேயே தற்போது ஆல்யா 4.5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்த குழந்தை குறித்து தாங்கள் திட்டமிடவில்லை என்றும், இது குறித்து அறிவித்த போது ராஜா ராணி 2 இயக்குனர் பிரவின் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து சீரியலில் ஆல்யா தான் சந்தியாவாக நடிக்க வேண்டும் என்றும், வேறு யாரையும் மாற்றவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆல்யா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு தகுந்த படி கதையில் மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து ஆல்யா தான் நடிக்க இருப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் இந்த ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும், அவரே தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என்று அறிந்த பின் அவர்கள் மகிழ்ச்சி கூடுதலாகி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here