விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் ஐக்கி பெர்ரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஓட்டின் அடிப்படையில் தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று நிகழ்ச்சி அமைப்பு கூறுகின்றது. அதன்படி, இந்த வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் எலிமினேஷன்:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து வருகின்றது. பல விமர்சனங்களையும் கடந்து தான் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துவேன் என்று கூறி வந்த உலக நாயகன் கமல் அவர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு சிலர் கமலுக்கு பதிலாக அவரது மகள் ஸ்ருதிஹாசன் வருவார் என்றும், ஒரு சிலர் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்றும் கூறிவருகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி கணவருடன் கார்த்திகை தீப திருநாள் கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் கமலுக்கு தொற்று பாதிப்பு சிறிய அளவில் தான் இருப்பதால், உரிய பாதுகாப்புகளுடன் விர்ச்சுவல் (VIRTUAL) முறையில் கமல் தொகுத்து வழங்குவர் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் முன் எப்போதும் இல்லாத ஒரு நடைமுறையாக 3 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளனர். இதனால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் வெளியில் உள்ள நிலவரத்தை அறிந்த பின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனால் வீட்டிற்குள் நிகழ இருக்கும் சாதக, பாதகங்களை பற்றி போக போக தான் அறிந்து கொள்ள முடியும்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

இந்நிலையில், இந்த வாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ள போட்டியாளர்களில் யார் வெளியேறுவார்கள் என்று ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் யார் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்கள் என்று ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, குறைவான வாக்குகளை பெற்று ஐக்கி பெர்ரி இந்த வாரம் வெளியேற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஐக்கி பெர்ரி ஆரம்பத்தில் இருந்தே மிகவும் போலியாக தெரிகிறார் என்று போட்டியாளர்கள் பலர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கி பெர்ரி வெளியேறுவது குறித்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து நாளை தான் காண முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!