Airtel பயனர்களுக்கு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் – டேட்டா, டாக் டைம் உடன்!
முன்னணி நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ரூ.50 க்கும் குறைவான பல்வேறு திட்டங்களை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு திட்டங்கள்:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒன்றாகும். அதில் குறைந்த விலையில் பல சிறப்பு திட்டங்களை, ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு என அனைத்திலும் வழங்குகிறது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்ட் என இரண்டு சேவைகளையும் வழங்குகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வித்துறை திட்டம்!
ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50ரூபாய்க்குள் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. வெறும் 10 ரூபாயில் இருந்து பல்வேறு திட்டங்களை வழங்கபடுகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.44 கான ப்ரீபெய்ட் திட்டத்தில் 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு எம்பி டேட்டாவிற்கு 50 பைசா என கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரூ .38.52 டாக் டைம் மற்றும் வினாடிக்கு 2.5 பைசா என கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த திட்டமானது 28 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஏர்டெல் வழங்கும் ரூ.48 கான திட்டத்தில் 3GB டேட்டா வழங்கப்படுகிறது. டாக் டைம் இல்லாத இந்த திட்டமானது அன்லிமிடெட் பேக் முடியும் வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏர்டெலில் வழங்கப்படும் ரூ.20 கான திட்டத்தில் ரூ. 14.95 டாக் டைம் வழங்கப்படுகிறது. இந்த டாக் டைம் இருக்கும் வரை இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏர்டெல் வழங்கும் ரூ.19 கான திட்டத்தில் மொத்தம் 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 2 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் கால் செய்யும் வசதியும் உண்டு. இறுதியாக ஏர்டெல் வழங்கும் ரூ.10 திட்டமானது ரூ .7.47 டாக் டைம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு கால அளவு ஏதும் இல்லை.