Airtel, Jio, Vi ன் ரூ.449 ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் சலுகை விளக்கம்!

0
Airtel, Jio, Vi ன் ரூ.449 ரீசார்ஜ் திட்டம் - கூடுதல் சலுகை விளக்கம்!
Airtel, Jio, Vi ன் ரூ.449 ரீசார்ஜ் திட்டம் - கூடுதல் சலுகை விளக்கம்!
Airtel, Jio, Vi ன் ரூ.449 ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் சலுகை விளக்கம்!

தினசரி 2GB டேட்டாக்களை அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499க்கும் குறைவான விலையில், வழக்கமான சேவைகளுடன் கூடுதல் சலுகைகளை Airtel, Jio, Vi ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளிக்கிறது.

ரீசார்ஜ் திட்டம்

இன்றைய கால கட்டத்தில் இணைய வசதி இல்லாத ஒரு நபரை கூட காண்பது அரிதாகும். அதாவது பொருளாதார நிலையில் பின் தங்கிய கிராமங்களிலும் இப்போது ஸ்மார்ட் போன்கள், இணைய வசதியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்கள் பலரும் மிக குறைந்த விலையில், அதிகளவு இணைய சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு என சில பிரத்யேக திட்டங்களை Airtel, Jio, Vi நிறுவனங்கள் அளிக்கிறது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? உணவு வழங்கல் துறை விளக்கம்!

அந்த வகையில் 2 GB தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இலவச பயன்பாட்டு சந்தாக்களை வழங்கும் திட்டங்களைத் தேடும் பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைஅறிமுகப்படுத்துகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS ஆகியவை 56 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச அணுகலும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஜூலை 26 முதல் பள்ளிகள் திறப்பு, ஜூலை 31க்குள் ஊழியர்களுக்கு தடுப்பூசி – மாநில அரசு திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.444 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், மற்ற அனைத்து நெட்வொர்க்குக்குமான அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS ஆகியவற்றுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாக்களை அளிக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு பயனர் மொத்தம் 112 GB டேட்டாவை சுமார் 56 நாட்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகைகளை ஜியோவின் ரூ.249 திட்டமும் கொடுக்கிறது. ஆனால் இது 28 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். இவை ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன், மொத்தம் 56 டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS ஆகியவற்றுடன் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் கொடுக்கிறது.

ICSE, ISC 10 , 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – இன்று பிற்பகல் வெளியீடு !!

வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பொருத்தளவு, இது தினசரி 2 GB டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. இந்த திட்டம் இரட்டை டேட்டா சலுகையுடன் கொடுக்கப்படுகிறது. அதாவது வோடபோன் பயனர்கள் தினசரி 4 GB டேட்டாவை பெற முடியும். இது 56 நாட்கள் வரை செல்லுபடியாகும் காலத்துடன் வார இறுதி தரவு மாற்ற வசதியையும் அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!