MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு – AICTE அறிவிப்பு !

0
MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு - AICTE அறிவிப்பு !
MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு - AICTE அறிவிப்பு !

MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு – AICTE அறிவிப்பு !

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆனது 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து எம்.சி.ஏ. முதுகலை படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்துள்ளது.

AICTE புதிய  வழிகாட்டு நெறிமுறைகள்:

இது குறித்து இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் கூறியதாவது இளநிலை படிப்பை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதாலும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாடுகள் என்ற எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வம் பெருமளவில் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்பதால் இந்த புதிய  வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இணைந்த எம்சிஏ படிப்புக்கான வழிகாட்டுதலில், தற்போதைய நடைமுறையின்படி பிசிஏ படித்தவர்கள் மட்டும் எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகள் படித்தால் மட்டும் போதுமானது. அதேநேரத்தில் இதர இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் தனது வழிகாட்டுதல் நெறிமுறைகளில் ஏஐசிடிஇ குறிப்பிட்டுள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்..!

UGC-ன் 545-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து 3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைத்து AICTE அறிவித்துள்ளது. B.Sc., BCA, B.Com., உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சியானவர்கள் நேரடியாக சேரலாம். கடந்த ஆண்டில் MCA படிப்பில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலையடுத்து புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு 2020-21 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!