ஆதிதிராவிடர்‌ நலப்பள்ளிகளில்‌ வேலை – சம்பளம்: ரூ.12000/-

0
ஆதிதிராவிடர்_ நலப்பள்ளிகளில்_ வேலை
ஆதிதிராவிடர்_ நலப்பள்ளிகளில்_ வேலை

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர்‌ நலப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி மற்றும்‌ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர்‌ நலப்பள்ளி
பணியின் பெயர் இடைநிலை/பட்டதாரி மற்றும்‌ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆதிதிராவிடர்‌ நலப்பள்ளி காலிப்பணியிடங்கள்:
  • இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் – 2 பணியிடங்கள்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ – 7 பணியிடங்கள்
இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் தகுதி விவரம்:
  • வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விலும்‌ தேர்ச்சி பெற்று இல்லம்‌ தேடி கல்வித்‌ திட்டத்தில்‌ தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள்‌ (இல்லையெனில்‌) வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன்‌ ஆசிரியர்‌ தகுதி தேர்விலும்‌ தேர்ச்சி பெற்றவர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இடைநிலை ஆசிரியர்‌ நியமனத்தில்‌ பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி விவரம்:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ தெரிவுக்கான ஆசிரியர்கள்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ நடத்தப்பட்ட தேர்வுகளில்‌ பங்கேற்று சான்றிதழ்‌ சரிபார்ப்பில்‌ கலந்து கொண்டவர்கள்‌.

  • பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள்‌ வசிப்பவர்கள் (இல்லையெனில்‌)
  • பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள்‌ வசிப்பவர்கள்‌ (இல்லையெனில்‌)
  • மாவட்ட எல்லைக்குள்‌ வசிப்பவர்கள்‌ (இல்லையெனில்‌)
  • அருகாமை மாவட்டத்தில்‌ வசிப்பவர்கள்‌
சம்பள விவரம்:
  • இடைநிலை ஆசிரியர் – ரூ.7500/-
  • பட்டதாரி ஆசிரியர் – ரூ.10000/-
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ -ரூ.12000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள்‌ சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ 2ம்‌ தளத்தில்‌ இயங்கும்‌ மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலகத்தில்‌ விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல்‌ மூலமாகவோ 18.01.2023 மாலை 5.45 மணிக்குள்‌ அளிக்கலாம்‌.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!