சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை – வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பு!

0
சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை - வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பு!
சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை - வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பு!
சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை – வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பு!

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக, திருடா திருடி படம் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சாய சிங் தற்போது சின்னத்திரையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சன் டிவி சீரியல்:

முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான சன் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பெரிய திரை முன்னணி நடிகைகளை சீரியல்களில் களமிறக்குவதே புதிய ட்ரெண்டாக உள்ளது. அந்த வரிசையில், 90’ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்து, மன்மத ராசா பாட்டிற்கு புயல் போல நடனம் ஆடிய சாயா சிங் தற்போது சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

டிக்டாக் ஜிபி முத்து உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி நடிகை – இணையத்தில் வைரல்!

திருடா திருடி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் இவர். அதன் பின்னர் நடிகர் விஜய் உடன் இணைந்து திருப்பாச்சி படத்தில் கும்பிட போன தெய்வம் பாட்டிற்கு நடனம் ஆடினார். மேலும் அருள் படத்தில் உக்கடத்து பம்பரம் போன்ற பாடங்களில் சிறப்பு ரோலில் வந்து நடனம் ஆடி உள்ளார். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

TN Job “FB  Group” Join Now

அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடிக்க உள்ளார். இந்த சீரியலில் சாய சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்கு பின்னர் இந்த தொடர் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!