சன் டிவி ‘சாவித்ரி’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரக்ஷிதா – வைரலாகும் ப்ரோமோ!

0
சன் டிவி 'சாவித்ரி' சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரக்ஷிதா - வைரலாகும் ப்ரோமோ!
சன் டிவி 'சாவித்ரி' சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரக்ஷிதா - வைரலாகும் ப்ரோமோ!
சன் டிவி ‘சாவித்ரி’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரக்ஷிதா – வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரக்ஷிதா தற்போது சன் டிவியில் ‘சாவித்ரி’ என்ற புத்தம் புதிய சீரியலில் களமிறங்க இருப்பதாக வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ரக்ஷிதா

தமிழ் சின்னத்திரையில் சுமார் 3 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ஒரு முக்கியமான சீரியல் ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியல் மூலம் தமிழ் மொழிக்கு அறிமுகமான நடிகை ரக்ஷிதா மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்தார். இந்த சீரியலில் 2 சீசன்களாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரக்ஷிதா பிரபல சின்னத்திரை நடிகர் தினேஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் டிவியின் ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

லிப்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ புகழ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடுத்து நடந்தது என்ன?

இந்த சீரியலுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மஹாவாக நடித்து வந்த நடிகை ரக்ஷிதா திடீரென பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து கலர்ஸ் டிவியின் ‘அம்மன்’ சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கன்னட சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகை ரக்ஷிதா மீண்டுமாக தமிழ் சின்னத்திரையில் களமிறங்க இருக்கிறார். அதாவது, சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ‘சாவித்ரி’ என்ற புத்தம் புதிய சீரியலில் களமிறங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷின் சர்ச்சை பதிவு – அவரே அளித்த விளக்கம்!

அந்த வகையில் இந்த சீரியலில் குடும்ப பாரத்தை சுமக்கும் ஒரு பெண்ணாக ரக்ஷிதா நடிக்க இருப்பதை போல அந்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவானது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் நடிகை ரக்ஷிதாவின் இந்த சீரியல் பிரவேசத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here