லிப்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ புகழ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடுத்து நடந்தது என்ன?
திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட பிரியாணி உணவக திறப்பு விழாவிற்கு விருந்தினராக பங்கேற்க வந்த அவர் லிப்ட்டில் மாட்டிக்கொண்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் புகழ்:
விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் புகழ். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் அதிகம் பெண் வேடமிட்டு தனது எதித்தார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதில் அவருக்கும் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்ததன் மூலமாகவே பிரபலமடைந்தார். இவரின் காமெடி நிறைந்த பேச்சுக்கு அனைவரும் ரசிர்கள் தான் இவருக்காகவே குக் கோமாளி பார்ப்பவர்கள் அதிகம்.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷின் சர்ச்சை பதிவு – அவரே அளித்த விளக்கம்!
இந்த குக்வித் கோமாளி இவரது வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையாக இருந்தது. இதன் மூலம் இவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பீஸ்ட், வலிமை, அருண்விஜய் 33, சபாபதி, என்ன சொல்ல போகிறாய், விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் சிறப்பு விருந்திரனாக பல நிகழ்ச்சிக்கு வருகை புரிவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருச்சி தென்னுார் சாலையில் புதியதாக கட்டப்பட்ட பிரியாணி உணவகத்திற்கு சிறப்பு விருந்திரனாக அழைக்கப்பட்டார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!
அப்போது அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைக்க லிப்டில் சென்றார். அவருடன் வந்த போட்டோகிராபர்கள், பாக்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள கடைக்கு சென்று காத்திருந்தனர். . 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிப்ட் வராததால் பதட்டம் அடைந்தனர். வெளியே வந்ததும் ஏன் தாமதம் என்று கேட்ட போது 10 நிமிடத்திற்கும் மேலாக லிப்ட் திடீரென வேலை செய்யதால் முதல் தளத்திலேயே நின்றது. பிறகு சரியான பிறகு திரும்ப இயக்கப்பட்டு வந்ததாக புகழ் தெரிவித்துள்ளார்.