பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி? புதிய முல்லை இவர்தான்!

1
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி? புதிய முல்லை இவர்தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி? புதிய முல்லை இவர்தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி? புதிய முல்லை இவர்தான்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதற்கான உண்மையான காரணம் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தம்பி கதிரின் மனைவி முல்லை கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். முல்லை மற்றும் கதிரின் காதல் காட்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் திடீரென விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தார்கள். முல்லையாக யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது. அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிவுமணியாக நடித்த காவ்யா அறிவுமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சித்ராவின் ரசிகர்கள் காவ்யாவை முல்லையாக ஏற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் தற்போது அவர் முல்லையாக பல ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!

அவரும் முல்லை கதாபாத்திரத்தில் இருந்து மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்துள்ளதால் அவரால் நேரம் ஒதுக்க முடியாது எனவே சீரியலில் இருந்து விலக இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் பிக் பாஸ் கவினுடன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதை விக்னேஷ் சிவன், நயன்தாரா இயக்கத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதில் தர்ஷா குப்தா, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!