சன் டிவி “அன்பே வா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!

0
சன் டிவி
சன் டிவி "அன்பே வா" சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை - வெளியான புகைப்படம்!!
சன் டிவி “அன்பே வா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றான அன்பே வா சீரியலில், 80’ஸ் நடிகை அம்பிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியல் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகை அம்பிகா:

80’ஸ் திரைப்படங்களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய சகோதரி ராதாவும், சிவாஜி முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அம்பிகா, அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அம்பிகா.

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2021 இன்று அறிவிப்பு? டிசம்பரில் தேர்வு!

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்த அம்பிகா, தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருகிறார். 200 எபிசோட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஜெயாம்மா கேரக்டரில், ஹீரோ அமித் பார்கவின் அம்மாவாக அம்பிகா நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் கலக்கிய அம்பிகா, தற்போது விஜய் டிவியில் வேலம்மாள் சீரியலிலும் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்பே வா சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருவதால் TRPயில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நடிகை அம்பிகாவின் வருகையால் மேலும் இந்த சீரியல் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அம்பிகா அன்பே வா படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!