தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை – அமைச்சர் உறுதி!

0
தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை – அமைச்சர் உறுதி!

தமிழக சட்டசபையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் உறுதி:

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.16 முதல் வகுப்புகள் – அறிவிப்பு வெளியீடு!

இந்த விவாதத்திற்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் பதிலளித்து கூறியதாவது, “தமிழ்நாட்டின் புவியியல் பரப்பான ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டரில், பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 23 ஆயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது 17.83 சதவீதம் ஆகும். வனப்பரப்பு 26 ஆயிரத்து 364 சதுர கிலோ மீட்டரும், மரப்பரப்பு 4,830 சதுர கிலோ மீட்டரும் என மொத்த வன மற்றும் மரப்பரப்பு 31,194 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது புவியியல் பரப்பில் 23.98 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் வன மற்றும் மரப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையினை செயல்படுத்துவதற்கு வரும் ஆண்டுகளில் பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மனித வனவிலங்கு மோதல்களால் பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள் பாதிக்கப்படுவது காட்டுப் பன்றிகளால் தான்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிகள் மூடப்படுமா?

இதற்கு தீர்வு காணும் வகையில், காட்டுப் பன்றியை ‘வெர்மின்’ (விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை கொல்ல அனுமதி) வகையாக மாற்றம் செய்து அவசியப்படுகின்ற காலத்திலும், அவசியமான மாவட்டத்திலும் அரசு சட்ட விதிகளுக்குட்பட்டு, வனத்துறை அதிகாரிகள் மூலம் சுடுவதற்கு அல்லது விவசாயிகளின் கோரிக்கையின்படி விவசாய நிலத்திலேயே காட்டு பன்றிகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!